top of page
TNIUK Logo

அன்புடையீர் வணக்கம்,

இந்தியாவில் இயற்கை உழவாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இயங்கி வருகிறது. கடந்த காலங்களில், உலகளாவிய செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டால், நிலம், நீர், காற்று, என சூழலியல் பாதிப்பு, காலநிலை மாற்றச் சிக்கல்கள், உண்ணும் உணவின் வழியே உடல் நல பாதிப்பு போன்ற சிக்கல்களை மக்கள் வெகுவாக உணர் ஆரம்பித்துள்ளனர்.

'நஞ்சில்லா உணவு நமது அடிப்படை உரிமை' பல்லுயிருக்கான சூழலின் அவசியம் மற்றும் உணவின் முக்கியத்தை உணர்த்த, நம்மாழ்வார் ஐயா தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டார். அவர் தமிழகமெங்கும் பயணம் செய்து உழவர்களை ஒன்று திரட்டும் பணியை செய்து வந்த நிலையில் 2013இல் ஐயாவின் மறைவு, இயற்கை உழவர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே வெறுமையை தோற்றுவித்தது.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற தொடர் முயற்சிகளுக்கு பின்னர், இயற்கை உழவாண்மையில் பன்னெடுங்காலம் பயணிக்கும் முன்னோடிகள் மற்றும் இளம் உழவர்கள், அமைப்புகள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 'தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்' உருவாக்கப்பட்டது. இயக்கத்தின் முதல் நிகழ்வாக, வரும் 2025 பிப்ரவரி மாதம் 15, 16 நாட்களில் - ஈரோடு மாவட்டம், சித்தோடு பைபாசில் உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் "இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு" நடைபெற இருக்கிறது.

மாநாடு சிறப்புற நடைபெற உழவர்களுடன் நுகர்வோர்களாகிய நீங்களும் கலந்துகொண்டு உங்கள் அனைவரின் ஆதரவையும் வழங்க வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

மாநாட்டு நிகழ்வுகள்

1. தேசிய ஆளுமைகளின் உரைகள், கருத்தரங்குகள்.

2. நிலைத்து நீடித்த இயற்கை வழி உழவாண்மையில் வெற்றிகரமான உழவர்களின் அனுபவப் பகிர்வு.

3.மரபணு மாற்றப்பட்ட விதைகளின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு அமர்வு.

4.உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் அரசுக்கான வழிகாட்ட நெறிமுறைகள்.

5. தகவல் அறியும் உரிமை சட்டம், கிராம சபை, உள்ளாட்சிகளின் அவசியம்.

6.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த உரைகள், மாற்று வழிமுறைகள்.

7. தமிழ்நாடு முழுவதும் உள்ள அமைப்புகளின் கலந்துரையாடல், அனுபவப் பகிர்வு.

8. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உண்டான செயல் திட்டங்கள் உருவாக்கம்.

9.அரசுக்கு மாநாடு வாயிலாக பிரகடனம் வலியுறுத்துவது.

10.ஒருங்கிணைந்த முன்மாதிரி பண்ணைகளை வேளாண் சுற்றுலாவுடன் இணைப்பது.

காட்சியகங்கள்

  • இயற்கை உழவாண்மையில் உழவர்களின் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தல்

  • பாரம்பரிய நெல், காய்கறி விதைகள், கிழங்குகள் காட்சிப்படுத்துதல்.

  • உழவாண்மையில் எளிய உழவுக் கருவிகளின் பயன்பாடு மற்றும் கண்காட்சி.:

  • கைவினைப் பொருட்கள் கண்காட்சி

விற்பனை அரங்குகள்

  • ​பாரம்பரிய விதைகள், கிழங்குகள், நெல் ரகங்கள் விற்பனை மற்றும் மரபு விதை பகிர்வு

  • இயற்கை உழவாண்மையில் விளைந்த விளைப் பொருட்கள் விற்பனை அரங்குகள்

  • வீட்டு பயன்பாட்டு தற்சார்பு பொருட்களின் விற்பனை. தயாரிப்பு பயன்பாட்டு விளக்கங்கள்

  • இயற்கை ஆடைகள் விற்பனை

  • பனை, தென்னை கைவினைப் பொருட்கள் விற்பனை

டெக்ஸ்வேலி வளாகம்

NH 544, சித்தோடு பைபாஸ் சாலை,

ஈரோடு

Feb 15-16, 2025
  • Facebook
  • Instagram
தொடர்புக்கு

வெற்றிமாறன். இரா : 9566667708

ஐந்துணை வேலுச்சாமி : 9842853068

ஹிமாகிரன்: 9840904244

இயல் கார்த்திக் : 9865290870

சீரகம் கௌரி : 8072232778

விஷ்ணு பிரியன் : 9080141074

bottom of page